ஒரு பேருந்துப் பயணியின் நாட்குறிப்பு
காததிரும் சத்தத்தில் போய்க்கொண்டிருக்கும் பாடலை உள்வாங்கியும் வாங்காமலும் அவனது இன்னொரு நெடுந்தூரப் பயணம் தொடர்கிறது.
அந்த விடிகாலைப்பொழுதின் குளிர் அவனை இதமாக வருடிச்செல்கிறது. நிசப்த இரவில் ஒற்றைவிரல் தீண்டும் மகரயாழின் நாதமென அது அவனை ஏதோ செய்திருக்கவேண்டும்.
மொத்தக் காதலையும் குழைத்துக் கண்ணம்மாவாகச் சமைத்த பாரதி அவன் அருகில் இருந்திருக்கவேண்டும். அந்த நெடுந்தூரப் பயணம் முழுவதும் தன் கற்பனையில் உருப்பெற்ற கண்ணம்மாவைப் பற்றிப் பேசிப்பேசிப் பொழுதெலாம் தீர்த்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகையில் அவன் இதழ்க்கடையில் ஒரு புன்னகைப்பூ உதிர்ந்திருந்தது.

போகும் வழியிலெலாம் - நின்
புன்னகை தோன்றுதடி
பாகு மொழியிலுன்னை - நான்
பாடுவன் கண்ணம்மா
என்று உள்ளுக்குள்ளே உருப்பெற்று ஓடிக்கொண்டிருந்த வரிகளுக்கு அணையெதற்கு எனவெண்ணிக் கண்ணம்மாவியலில் மூழ்கத்தொடங்கியிருந்தான்.
நிறோஷ் ஞானச்செல்வம்
2017.03.11

Comments
Post a Comment