சினிமா சூழ் உலகு - பகுதி 4

காலக் காலின் ஞெகிழமே - 4

அப்படியே தொடரும் பாடல்,
“வா மழைமலரே, என் வாழ்வின் இளம்புலரே”

மழைமலர்
***

இங்கு மழைமலரே என்பதால் குறிக்கப்படுவது யாதாக இருக்கும்?
குளவி (Patchouli) என்று ஒரு தாவரம். குறிஞ்சி நிலத்திற் பூப்பது. விஞ்ஞானப்பெயர் Pogostemon cablin.




இது முதல் மழை பெய்தவுடன் அரும்புவிட்டுப் புதர்புதராகப் பூத்துக்குலுங்கும் என்று விக்கிப்பீடியாவில் படித்தேன். இம்மலர்கள் மிகுந்த நறுமணமுடையதாம். இருந்தாலும் பாடலாசிரியர் இதைக்குறிப்பிட்டிருப்பாரா அல்லது இது போல் வேறு ஏதும் மலர்கள் உள்ளதா என்று தெரியவில்லை.
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

இளம்புலர்
***

இளம்புலரே!
புலர் என்பது விடியல்.
விடியலே இளமையானது தான், இங்கு இளம்விடியலே என்கிறார் பாடலாசிரியர். ஆக நீ என் வாழ்க்கைக்கு மிகவும் இதமானவள், இளமையானவள் என்கின்றார் அவர்.

தொடரும்...
 *** 

இங்கு பயன்படுத்தப்பட்ட படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை, காப்புரிமைக்குட்பட்டதென அறிவிக்கப்படுமிடத்து அவை நீக்கப்படும். நன்றி.


Images : Downloaded from Google. Some of these images may be copyrighted. If so they will be removed from this blog. Thank you.
 

நிறோஷ் ஞானச்செல்வம்
2017.03.19

Comments