உதடுகள் ஒட்டாத திருக்குறள்கள் : இதழகல் குறள்வெண்பாக்கள்.
சும்மா இருக்கிறோமே எதையாவது உருப்படியாக வாசிப்போமே என்று திருக்குறள் புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். எல்லோரும் சொல்வது போல் , உண்மையிலேயே அது உலகப்பொது மறைதான். முக்கியமான பல பரிமாணங்களைத் திருவள்ளுவர் வெகு சுலபமாகக் கையாண்டிருக்கின்றார். ஏழு சீர்களில் எவ்வளவோ விடயங்களை எழிலாக உரைக்கின்றார்.
இதைத் தான் இடைக்காடர்,
கடுகைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்
என்றும் இன்னும் அதனைச் சிறப்பிக்கும் வகையில் ஔவையார்
அணுவைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்
என்றும் கூறுகின்றனர்.
திருக்குறள் பற்றி பல சுவாரசியமான விடயங்கள் இருக்கின்றன. திருக்குறள் கவனகர்களால் அவை எம் கவனத்திற்குள்ளாக்கப்படுகின்றன. இவ்வாறான ஒரு சுவாரசியமான விடயம் தான் "இதழகல்" என்று சொல்லப்படுகின்ற உதடு ஒட்டாத திருக்குறள்கள்.
துறவு எனும் அதிகாரத்தில் ஒரு குறள் வெண்பா உள்ளது. இதன் பொருள் கூட மிக அருமையான கருத்தினை புலப்படுத்துகின்றது.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். 341
பொருள் : ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.
இது, உதடு ஒட்டாத திருக்குறள் என்று பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக இணையத்தில் ஏதேனும் தகவல்கள் பெற முடியுமா என்று முயற்சித்த போது பல சுவாரசியமான
தகவல்கள் கிடைத்தன. இலக்கியத்திருட்டுக்கு என் பதிவு உள்ளாகக் கூடாது என்ற வகையில் நான் புரிந்து கொண்ட விடயங்களை என் மொழி நடையில் தொகுக்கின்றேன். பிழைகளிருப்பின் மன்னிக்கவும்.
பலரால் பல திருக்குறள்கள் இதழகல் என இனங்காணப்பட்டுச் சொல்லப்பட்டிருக்கின்றன. 28 இதழகல் குறழ் வெண்பாக்கள் இருப்பதாக சில கவனக அறிஞர்கள் குறிப்பிடுவதாக இணையத்தின் வாயிலாக அறிய முடிகின்றது. அவற்றை அதிகார வரிசைப்படி ஒழுங்குபடுத்தித் தொகுத்துத்தர முனைகின்றேன். இலகு புரிதலுக்காக மு.வரதராசனார் அவர்களின் உரையையும் இத்துடன் இணைக்கின்றேன்.
தீயவை செய்தார் கெடுத னிழறன்னை
வீயா தடியுறைந் தற்று. 208
பொருள் : தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.
வசையொழிய வாழ்வாரே வாழ்வா ரிசையொழிய
வாழ்வாரே வாழா தவர். 240
வசையொழிய வாழ்வாரே வாழ்வா ரிசையொழிய
வாழ்வாரே வாழா தவர். 240
பொருள் : தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.
அளவின்க ணின்றொழுக லாற்றார் களவின்கட்
கன்றிய காத லவர். 286
அளவின்க ணின்றொழுக லாற்றார் களவின்கட்
கன்றிய காத லவர். 286
பொருள் : களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.
இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. 310
இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. 310
பொருள் : சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.
யாதனின் யாதனி னீங்கியா னோத
லதனி னதனி னிலன். 341
யாதனின் யாதனி னீங்கியா னோத
லதனி னதனி னிலன். 341
பொருள் : ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.
இன்சொலா லீத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலாற்
றான்கண் டனைத்திவ் வுலகு. 387
இன்சொலா லீத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலாற்
றான்கண் டனைத்திவ் வுலகு. 387
பொருள் : இனியச் சொற்க்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்கவல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதிய படி அமைவதாகும்.
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது. 419
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது. 419
பொருள் : நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.
அறிவுடையா ராவ தறிவா ரறிவிலா
ரஃதறி கல்லா தவர். 427
அறிவுடையா ராவ தறிவா ரறிவிலா
ரஃதறி கல்லா தவர். 427
பொருள் : அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில். 446
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில். 446
பொருள் : தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு, அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை.
ஒல்வ தறிவ தறிந்ததன் கட்டங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில். 472
ஒல்வ தறிவ தறிந்ததன் கட்டங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில். 472
பொருள் : தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.
எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே
செய்தற் கரிய செயல். 489
எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே
செய்தற் கரிய செயல். 489
பொருள் : கிடைத்தற்கரிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த வுணர்ந்து செயல்.516
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த வுணர்ந்து செயல்.516
பொருள் : செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்கக் காலத்தோடு பொருந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று. 523
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று. 523
பொருள் : சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.
கலங்காது கண்ட வினைக்கட் டுளங்காது
தூக்கங் கடிந்து செயல். 668
கலங்காது கண்ட வினைக்கட் டுளங்காது
தூக்கங் கடிந்து செயல். 668
பொருள் : மனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றத் தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்.
வினையான் வினையாக்கிக் கோட னனைகவுள்
யானையால் யானையாத் தற்று. 678
வினையான் வினையாக்கிக் கோட னனைகவுள்
யானையால் யானையாத் தற்று. 678
பொருள் : ஒரு செயலைச் செய்யும் போது அச் செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
யொட்டாரை யொட்டிக் கொளல். 679
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
யொட்டாரை யொட்டிக் கொளல். 679
பொருள் : பகைவராக உள்ளவரைப் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளல், நண்பர்க்கு உதவியானவற்றைச் செய்தலைவிட விரைந்து செய்யத்தக்கதாகும்.
கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க்
காற்றாதா ரின்னா செயல். 894
கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க்
காற்றாதா ரின்னா செயல். 894
பொருள் : ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.
எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து. 1080
எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து. 1080
பொருள் : கயவர், எதற்கு உரியவர், ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதற்காக தம்மைப் பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர் ஆவர்.
நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து 1082
நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து 1082
பொருள் : நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.
உழந்துழந் துண்ணீ ரறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்க்கண்ட கண். 1177
உழந்துழந் துண்ணீ ரறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்க்கண்ட கண். 1177
பொருள் : அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.
வாராக்காற் றுஞ்சா வரிற்றுஞ்சா வாயிடை
யாரஞ ருற்றன கண்.1179
வாராக்காற் றுஞ்சா வரிற்றுஞ்சா வாயிடை
யாரஞ ருற்றன கண்.1179
பொருள் : காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கிடையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.
காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து. 1211
காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து. 1211
பொருள் : ( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?
நனவினா னல்கா தவரைக் கனவினாற்
காண்டலி னுண்டென் னுயிர். 1213
நனவினா னல்கா தவரைக் கனவினாற்
காண்டலி னுண்டென் னுயிர். 1213
பொருள் : கனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.
நனவினா னல்காரை நோவர் கனவினாற்
காதலர்க் காணா தவர்.1219
நனவினா னல்காரை நோவர் கனவினாற்
காதலர்க் காணா தவர்.1219
பொருள் : கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத காதலரை ( அவர் வராத காரணம் பற்றி ) நொந்து கொள்வர்.
தொடியொடு தோணெகிழ நோவ லவரைக்
கொடிய ரெனக்கூற னொந்து. 1236
தொடியொடு தோணெகிழ நோவ லவரைக்
கொடிய ரெனக்கூற னொந்து. 1236
பொருள் : வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.
உள்ளத்தார் காத லவராக வுள்ளிநீ
யாருழைச் சேறியென் னெஞ்சு. 1249
உள்ளத்தார் காத லவராக வுள்ளிநீ
யாருழைச் சேறியென் னெஞ்சு. 1249
பொருள் : என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?
காணுங்காற் காணேன் தவறாய காணாக்காற்
காணேன் தவறல் லவை. 1286
காணுங்காற் காணேன் தவறாய காணாக்காற்
காணேன் தவறல் லவை. 1286
பொருள் : காதலரை யான் காணும்போது ( அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை.
தனியே யிருந்து நினைத்தக்கா லென்னைத்
தினிய விருந்ததென் னெஞ்சு. 1296
தனியே யிருந்து நினைத்தக்கா லென்னைத்
தினிய விருந்ததென் னெஞ்சு. 1296
பொருள் : காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது.
முற்றிலும் இதழகல் வெண்பா
இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. 310
துறந்தார் துறந்தார் துணை. 310
பொருள் : சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.
யாதனின் யாதனி னீங்கியா னோத
லதனி னதனி னிலன். 341
யாதனின் யாதனி னீங்கியா னோத
லதனி னதனி னிலன். 341
பொருள் : ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.
எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே
செய்தற் கரிய செயல். 489
எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே
செய்தற் கரிய செயல். 489
பொருள் : கிடைத்தற்கரிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.
நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து 1082
நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து 1082
பொருள் : நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.
பதிவு சற்று நீண்டுவிட்டது... தங்கள் பொறுமைக்கு நன்றி.
திருக்குறள் இணையத்தில் படிக்க :
http://kural.muthu.org/
ஞா.நிறோஷ்.
வலையுலகம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...
ReplyDeleteசிறப்பாக ஆரம்பித்து உள்ளீர்கள்... பாராட்டுக்கள்...
இன்னும் உதடுகள் ஒட்டும் + ஒட்டாத குறள்களை அறிய...
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2012/09/Where-is-God-Lyrics-Part-1.html
http://dindiguldhanabalan.blogspot.com/2012/11/Where-is-God-Lyrics-Part-2.html
நன்றி... தங்களைப் போன்றவர்களின் வலைப்பதிவுகளே எனக்குத் தூண்டுகோல்... தங்கள் வாழ்த்துக்களும் ஆதரவும் தொடர்ந்தும் கிடைக்கட்டும்.
ReplyDeleteபயனுள்ள தகவல்.. வியப்பும் உவகையும் அடைந்தேன்..
ReplyDeleteபங்கு 😍 😍 😍 😍
ReplyDeleteஅருமை நண்பரே! குறள் வாழ உயிர் வாழும்.
ReplyDeleteஅருமை நண்பரே! குறள் வாழ உயிர் வாழும்.
ReplyDeleteநல்ல அலசல்
ReplyDeleteSuperb
ReplyDeleteYou have an opportunity to shine in modern tamil world
ReplyDeleteGreat work has been done by you sir congratulation.👌💐💐💐
ReplyDelete