கவிதையெனில் யாதென்று...

கவிதையெனில் யாதென்று கேட்டேன் உள்ளே
கவிகின்ற எண்ணத்தின் ஒருங்கு புள்ளி

தோன்றுகின்ற எண்ணத்தைச் சொல்லாய்க் கோத்துச்
சோகத்தை யான்மறக்கச் செய்யும் வித்தை

இன்னிசைக்குள் தோய்த்தெடுத்த இன்பச் சொற்கள்
இதமளிக்கும் தென்றலாக மாறும் ஆற்றல்

மோனத்தை முன்னிறுத்த மூண்ட வாசை
மோகனத்தைக் கூட்டுகின்ற காதற் சோலை

என்றுள்ளம் சொல்கின்ற பேச்சைக் கேட்டேன்
இன்பத்தில் வார்த்தைகளைக் கோத்து வைத்தேன்

கவிதைகள் தினம், World Poetry Day

நிறோஷ் ஞானச்செல்வம்
2017.03.21

Comments