சினிமா சூழ் உலகு - அறிமுகம்

அறிமுகம்.


இது எனக்குப் புதிது. சினிமா பற்றித்தெரியாது. இருந்தாலும் கொஞ்சம் சினிமாவுடன் மற்றைய விடயங்களை உட்புகுத்தி எழுதிப்பார்க்கலாம் என்று தோன்றியது.

சினிமா மக்களுக்கு நெருக்கமாக இருக்கின்ற ஒரு கலைவடிவம். மகிழ்ச்சியாக இருக்கும் போது கவலையாக இருக்கும் போது என்று பலவிதமான சந்தர்ப்பங்களிலும் திரையிசைப் பாடல்கள் நம்மை இயக்குகின்றன.

நகைச்சுவையை ரசிக்கிறோம். சிரிக்கிறோம். ஏன் இன்று மீம் எனப்படும் தகவல் வடிவங்களைக் கூட சினிமா ஆள்கிறது என்றால் மிகையாகாது. (மீம்களை வெறுப்பவர்கள் என்னை மன்னிப்பார்களாக)

இந்த சினிமாவில் நான் ரசித்த, என் மனதுக்கு நெருக்கமான விடயங்களில் எனக்குத் தெரிந்தவற்றை இணைத்தும் நான் அறியவேண்டியவற்றிற்கு வினாக்களை எழுப்பியும் இதனை எழுதுகின்றேன்.

பிடித்தவர்கள் கருத்திடலாம். பிடிக்காதவர்கள் கடக்கலாம். ஆக மொத்தத்தில் இதைப் படிக்காமல் கூட நீங்கள் கடந்து போகலாம். இதனால் எவ்வித மாற்றங்களும் ஏற்படப்போவதில்லை.

படித்துவிட்டு சினிமா பற்றி எதுவுமே இல்லை என்றும் நீங்கள் நினைக்கலாம். அதற்காகத்தானே முதலிலேயே “டிஸ்கி” கொடுத்துவிட்டேன். எனக்கு சினிமா தெரியாது.

ஷ்ஷபா... இவ்வளவு அறுவையா எழுதிட்டேங்க.. இனித் தொடரலாமா வேணாமா?

நிறோஷ் ஞானச்செல்வம்
2017.03.13

Comments