ஒற்றையடிப் பாதையிலே...!

ஒற்றையடிப் பாதையிலே
உனைக்காண வருகையிலே
நெற்றிப் பொட்டிட்டு மணமும்
நிறைந்த மலர்கள் சூடிக்
கற்றைக் குழலழகுக்
களிப்பில் மனம்மலர
முற்றும் எனைச்சாய்க்க
மோகனமே வந்தாயோ!

பாழ்மன மேங்கிப்
பாவையுன் விழிபார்த்து
வாழ்வெலாம் வாவென
வஞ்சியுனைக் கேட்கும்.
ஆழ்மன மெல்லாம்
அடர்ந்திட்ட இளங்கிளியே,
தாழ்வெலாம் நீக்கியென்
தனிமையைத் தீராயோ!

ஞா.நிறோஷ்
2015.12.27

Comments