வெள்ளம் வேண்டா...!
பள்ளமது பார்த்துநீரும் பாய்ந்தோடிப் பரவிநலம்
கொள்ளுமொரு குழாயமைப்புக் கோதறவே கொண்டிடவும்
வெள்ளமதால் விளைந்ததுயர் விலகிடவும் வேண்டியொரு
உள்ளமது ஒண்டமிழில் ஒருபாவும் உரைத்திடுதே!
கொள்ளுமொரு குழாயமைப்புக் கோதறவே கொண்டிடவும்
வெள்ளமதால் விளைந்ததுயர் விலகிடவும் வேண்டியொரு
உள்ளமது ஒண்டமிழில் ஒருபாவும் உரைத்திடுதே!
இனிமேல்,
வெள்ளம் வேண்டா வேதனை வேண்டா
உள்ளம் தன்னில் உறுதியும் ஓங்குக!
என்றமிழ்ப் பாவுடன் இருந்துயர் எல்லாம்
இன்றுடன் நீங்குக! இன்பம் சேர்கவே!
உள்ளம் தன்னில் உறுதியும் ஓங்குக!
என்றமிழ்ப் பாவுடன் இருந்துயர் எல்லாம்
இன்றுடன் நீங்குக! இன்பம் சேர்கவே!
(தரவுக் கொச்சகக் கலிப்பா)
2015.12.18
ஞா.நிறோஷ்
ஞா.நிறோஷ்
நிறோஷ் கவிதைகள்
Comments
Post a Comment