Skip to main content

Posts

Featured

என் கீர்த்தனம்!

நாட்குறிப்பில் மீதமாயிருந்த வெற்றுப் பக்கங்களை நிரப்புவதற்கான தீந்தையை உன் நினைவுகளிலிருந்து சேமித்துக்கொள்கின்றேன் தீட்டத் தீட்ட ஒவ்வொரு பக்கங்களிலும் வண்ணமயமாய் உருப்பெறுகிறது ஒரு கவிதை அனாகத நாதம் போல் எனக்குள் ஒலித்துக் கொண்டிருக்கின்றது உன் குரல் ஸ்ருதியில் நகரும் ஸ்வரங்களாய் ஆரோகணிக்கிறது உன் மீதான என் காதல் தனிமை அரங்கத்தில் ஏகாந்த ரசிகன் நான் எனக்கே எனக்கான நீ என் கீர்த்தனம்! நிறோஷ் ஞானச்செல்வம் 2019.05.03

Latest posts

an Gorta Mór

காதல்மொழி!

உச்சிப்பிள்ளை!

சித்திரக்கவி

என்னைப் பிரியாதிரு!

மெய்நிகர் உலகம்!

அவள்!

காளி யென்னும் போழ்தில்...

ஒரு கல்லூரி மாணவனின் விடுமுறைக்காலம்

ஈசனின் ஈழம் - திருக்கேதீச்சரம்