உச்சிப்பிள்ளை!
(Image from Pinterest)
தொப்பையாய் உதரந் தோன்றும் - ஒளிச்
சுடரெனப் போதம் தோன்றும்
ஒப்பிலா உச்சிப் பிள்ளை - எழில்
ஓங்கிய வதனம் தோன்றும்
சுடரெனப் போதம் தோன்றும்
ஒப்பிலா உச்சிப் பிள்ளை - எழில்
ஓங்கிய வதனம் தோன்றும்
வாரண வடிவம் தோன்றும் - உமை
பாலகன் உருவம் தோன்றும்
தாரணி எங்கும் வேழன் - கலை
தாங்கிய மேன்மை தோன்றும்
பாலகன் உருவம் தோன்றும்
தாரணி எங்கும் வேழன் - கலை
தாங்கிய மேன்மை தோன்றும்
மோதக அங்கை தோன்றும் - அவன்
மோகனச் சிரிப்புத் தோன்றும்
பாதகம் போக்கும் நாதன் - விழிப்
பார்வையின் கருணை தோன்றும்
மோகனச் சிரிப்புத் தோன்றும்
பாதகம் போக்கும் நாதன் - விழிப்
பார்வையின் கருணை தோன்றும்
கற்பகக் காட்சி தோன்றும் - எமைக்
காப்பவன் மாட்சி தோன்றும்
சிற்பர மோனத் தேவன் - துணை
திருவென வாகித் தோன்றும்
காப்பவன் மாட்சி தோன்றும்
சிற்பர மோனத் தேவன் - துணை
திருவென வாகித் தோன்றும்
ஏட்டினில் வித்தை தோன்றும் - நலம்
இலங்கிடும் வாழ்வு தோன்றும்
பாட்டினில் பொருளாய்த் தோன்றும் - மலர்ப்
பதங்களைத் தொழுவ தாலே!
இலங்கிடும் வாழ்வு தோன்றும்
பாட்டினில் பொருளாய்த் தோன்றும் - மலர்ப்
பதங்களைத் தொழுவ தாலே!
நிறோஷ் ஞானச்செல்வம்
2017.12.13
Comments
Post a Comment