காதல்மொழி!

காதல்மொழி சொல்லும்வரை காத்திருக்கிறேன்
மோதல்வழி வேண்டாமடி மொத்தமாகவுன்
உள்ளத்துள எண்ணங்களை உரைப்பதாலொரு
பள்ளத்துயிர் மேலேற்றிய பாவையாகிடு!
மௌனப்பதில் போதும்விழி மூடலாகுமோ
கொவ்வைப்பழ அதரங்களில் கோத்தவார்த்தைகள்
சொல்வாயடி! சொல்லாலெனைச் சொந்தமாக்கிடு!
எல்லாய்வரும் நேரத்தினை எண்ணிவாழ்கிறேன்!

பெண்ணே!

மயக்கம் என்றிதை மறுப்ப தேனோ?
தயக்கம் தானோ தாங்கி யிருப்பேன்
இருமனம் இணைகிற நாள்தான்
திருமணம் ஆகுமென் தேவ தேவியே!

எல் - ஒளி

நிறோஷ் ஞானச்செல்வம்
2018.03.30

Comments