காட்சிகள்!

காலைப் பரிதி உதயம்
```கத்துங் கிளிகள் கூட்டம்
சாலை யோரப் புற்கள்
```சார்ந்து நடக்கும் சிறுவர்
பாலைக் குடிக்கும் கன்று
```பானை சுமக்கும் பெண்கள்
ஓலை ஊடே மதியம்
```ஓதக் கடலில் அலைகள்

மலைகள் தழுவும் மஞ்சு
```மடியில் தவழும் பிஞ்சு
சிலையாம் அழகுப் பெண்ணாள்
```சிந்தை மயக்கும் கண்ணாள்
அலையும் கற்றைக் கூந்தல்
```அகத்துள் நிற்கும் வதனம்
நிலையா உலகில் என்னுள்
```நிலைக்கும் காட்சி களாமே!

மதியம் - நிலவு

அறுசீர் விருத்தம்

ஞா.நிறோஷ் அரவிந்த்
2016.01.16

Comments