ஈசா!

அகல் மின்னிதழுக்காகச் சிவராத்திரி சிறப்பிதழில் எழுதப்பட்ட வெண்பா.


மின்னிதழ் இணைப்பு இதோ: ஈசனின் ஈழம் (2016 November)
***

(வெண்பா)

அன்னை உமையாள் அருகிருக்க அத்தனும்
என்னையாளும் கோலமும் இன்பமே - இன்பமே
பித்தான உள்ளம் பிதற்றுகிற பாவினிற்
சத்தாக வாவா சிவா!
***

எழுந்தாடும் நாகம் இலங்குகறைக் கண்டா
வழுத்திடும் மன்னுயிர் வாழ்வில் - அழுத்திடும்
துன்பங்கள் போய்விடும் தூரமாய்! உன்னையே
முன்னின்று போற்ற முனைந்து (1)

செப்பத் தடையில் சிவனவன் நாமத்தை,
ஒப்ப எதுவுமிலை ஒண்பொருளை - அப்பன்
விரிசடையான் உள்ளத்தில் வீற்றிருக்க என்றும்
அரிதாம் துயரே அறி ! (2) ​




சோர்விலான், சுந்தரன் தோழனாம், சூழிடர்
நேர்நிலை வாரா நிறைவளிப்பான் - கார்முகில்
போல்வான் கருணை பொழிவான் சிவனவன்
சால்பே உலகெலாம் சாற்று (3)

மனத்துள யாவையும் மாசிலிக்க ளிக்கக்
கனத்துள வாழ்வையும் காப்பான் - மனத்தில்
விசனத்தைக் கூட்டும் வெறும்மாயப் பொய்கள்
அசைத்தே குலைப்பான் அரன்! (4)

கண்டுதேறும் ஞானமெல்லாம் கங்காளன் பாததூளி
விண்டுரைக்கும் பாடலெல்லாம் வேந்தனவன் - பண்ணாகும்
செண்டுமலர் தேவையில்லை செஞ்சடையன் தாள்களுக்கும்,
உண்டுமனப் பூவென்றே ஓர்! (5)

ஞா.நிறோஷ் (நிறோஷ் ஞானச்செல்வம், இலங்கை)
***

இங்கு பயன்படுத்தப்பட்ட படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை, காப்புரிமைக்குட்பட்டதென அறிவிக்கப்படுமிடத்து அவை நீக்கப்படும். நன்றி.


Images : Downloaded from Google. Some of these images may be copyrighted. If so they will be removed from this blog. Thank you.

Comments