தித்தித்திகு சத்தத் துடனொரு!
சந்தக்குழிப்பு :
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன - தனதானா
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன - தனதானா
தித்தித்திகு சத்தத் துடனொரு
தித்தித்திடு நட்டத் தினைவிழி
சொக்கத்தரு சித்தத் துறைபவ(ள்) வருவாளோ!
சித்தத்துறு பக்கத் துணையவள்
எட்டுத்திசை சுற்றித் தினமொரு
தித்திக்கிற வித்தைக் கவிசொல மகி(ழ்)வாளோ!
பித்தைத்தரு முத்தத் தினிமையை
மெச்சிக்களி கொட்டிச் சொலுமொழி
பெற்றுத்தரு பட்டுக் கனியித ழுடையாளோ!
பெட்டுக்களு மொட்டிப் பெருகிடு
கட்டுக்கதை கொட்டத் துணிகிற
பித்தைத்தரு முத்தத் ததரமு மளியாளோ!
வித்தைக்கொரு தத்தைக் குய(ர்)வினி
லொக்கச்சிறு மக்கட் தொகையிலை
வெற்றிப்படி முட்டச் செயவவ(ள்) வருவாளோ!
வெற்றிக்கனி எட்டச் செயவென
வொட்டிக்கர மிட்டுத் தனியொரு
மெட்டுத்தனை இட்டுப் பலமது தருவாளே!
எத்திக்கிலு மிட்டத் துடனொரு,
பச்சைக்கனி கொத்தித் தினுமெழில்
இச்சைக்கிளி பற்றிக் கவிசொல முனைவேனோ!
இத்திக்கிலு மத்திக் கிலுமவ
ளுக்குத்துணை நிற்கத் தமிழிலி
னிக்கச்சுவை மிக்கப் பனுவலு முருவாமே!
(பெட்டு – மயக்குச்சொல், உருவாமே - உருவாகுமே!)
வகை: பதினான்கு சீர் வண்ணம்
முதலாவது முயற்சி என்பதால் ஒரே சொற்கள் மீண்டும் வருதலையும், பொருட் செறிவின்மையையும் தவிர்க்கவியலாது போனது.
(குறிப்பு: முத்தைத்தரு பத்தித்திருநகை சந்தம்...)
ஞா.நிறோஷ் அரவிந்த்
2016.06.02
தித்தித்திடு நட்டத் தினைவிழி
சொக்கத்தரு சித்தத் துறைபவ(ள்) வருவாளோ!
சித்தத்துறு பக்கத் துணையவள்
எட்டுத்திசை சுற்றித் தினமொரு
தித்திக்கிற வித்தைக் கவிசொல மகி(ழ்)வாளோ!
பித்தைத்தரு முத்தத் தினிமையை
மெச்சிக்களி கொட்டிச் சொலுமொழி
பெற்றுத்தரு பட்டுக் கனியித ழுடையாளோ!
பெட்டுக்களு மொட்டிப் பெருகிடு
கட்டுக்கதை கொட்டத் துணிகிற
பித்தைத்தரு முத்தத் ததரமு மளியாளோ!
வித்தைக்கொரு தத்தைக் குய(ர்)வினி
லொக்கச்சிறு மக்கட் தொகையிலை
வெற்றிப்படி முட்டச் செயவவ(ள்) வருவாளோ!
வெற்றிக்கனி எட்டச் செயவென
வொட்டிக்கர மிட்டுத் தனியொரு
மெட்டுத்தனை இட்டுப் பலமது தருவாளே!
எத்திக்கிலு மிட்டத் துடனொரு,
பச்சைக்கனி கொத்தித் தினுமெழில்
இச்சைக்கிளி பற்றிக் கவிசொல முனைவேனோ!
இத்திக்கிலு மத்திக் கிலுமவ
ளுக்குத்துணை நிற்கத் தமிழிலி
னிக்கச்சுவை மிக்கப் பனுவலு முருவாமே!
(பெட்டு – மயக்குச்சொல், உருவாமே - உருவாகுமே!)
வகை: பதினான்கு சீர் வண்ணம்
முதலாவது முயற்சி என்பதால் ஒரே சொற்கள் மீண்டும் வருதலையும், பொருட் செறிவின்மையையும் தவிர்க்கவியலாது போனது.
(குறிப்பு: முத்தைத்தரு பத்தித்திருநகை சந்தம்...)
ஞா.நிறோஷ் அரவிந்த்
2016.06.02
Comments
Post a Comment