வண்ணப்பா பொருள்!



நேற்றுப் பதிவிட்டிருந்த வண்ணப் பாவின் பொருள்.
(வண்ணத்தினை வாசிக்க:  

Eluthu:
 

தித்தித்திகு தாளத்துடன்
அழகு நடனம் தனைப் புரிந்து
விழிகளைச் சொக்கச் செய்யவல்ல
காதற் பெண்ணாள் வருவாளோ!
***
உள்ளத் துணையானவள்
உலகெலாம் அவள் நலங்களைக்
கவிதையாகச் சொல்லிட மகிழ்வாளோ!
***
அவள்,
“பித்தினைத் தரும் முத்தத்தின்
இனிமையினை மெச்சி மகிழ்ந்து”
கவிதையாகச் சொல்லவைக்கின்ற
மென்மையான உதடுகளை உடையவளோ!
***
மயக்கும் மொழிகள் நிறைந்த
கட்டுக்கதைகள், சொல்ல வைக்கும்,
பித்தினைத் தருகின்ற அம் முத்தத்தின்
பிறப்பிடமான உதடுகளை அளிப்பாளோ!
***
வித்தையில் அவளுக்கிணை
யாரும் இங்கு இல்லையே.
அவள் என்னை வெற்றிக்கு
அருகினில் செல்ல வைப்பாளோ!
***
என்னை வெற்றி அடையச் செய்ய,
என்கைகளுடன் தன் கைகள் கோத்து
ஒரு தனியான சந்தத்தினையும் வழங்கி
என் கவிதைக்குப் பலமும் அளிப்பாளோ!
***
எல்லாத் திசைகளும் சுற்றிப்
பச்சைநிறமுள்ள கனிகளை
விரும்பிக் கொத்தித் தின்கின்ற
இச்சைக்கிளி போன்றவளைப் பற்றி
நான் கவிதை சொல்ல முனையட்டுமோ!
***
இங்கும் அங்கும் என எங்கும்
அவள் துணையாய் நான் நின்றிட,
அதன் பயனாகத் தமிழ் மொழியினில்
இனிமையான ஒரு புத்தகமும் உருவாகிடுமே!
(வேறென்ன கவிதைப் புத்தகம் தான்... ;) )

(பச்சைக்கனி – கொய்யாப்பழம்)

வண்ணப்பாவில் பயன்படுத்திய சில சொற்கள்.

நட்டம் – நடனம்
பித்து – பைத்தியம்
பெட்டு - மயக்குச்சொல்
அதரம் - உதடு
தத்தை – கிளி
இச்சை / இட்டம் - விருப்பம்
பனுவல் – புத்தகம்

ஞா.நிறோஷ் அரவிந்த்
2016.06.03


Comments