வஞ்சியழகைச் சொல்வேன் வா!

சீர்விழியாள் என்னுடைச் சிந்தை நிறைந்திருப்பாள்
பார்விழு கின்ற பனித்துளியாய்ச் - சேர்ந்தவளும்
நெஞ்சு குளிரவைப்பாள் நித்திலமாய்த் தேசளிப்பாள்
வஞ்சியழ கைச்சொல்வேன் வா!

இருவிகற்ப நேரிசை வெண்பா

ஞா.நிறோஷ் அரவிந்த்
2016.05.13

Comments