இலாவணி!
வஞ்சியெனைப் பார்க்கையிலே மிஞ்சுகின்ற காதலிலே
வண்டமிழிற் பாடிடுவேன் பாட்டு பாட்டு!
அஞ்சுகத்தாள் பக்கம்வரக் கெஞ்சுகின்ற போதினிலே
அண்டிடுவாள் நெஞ்சக்குரல் கேட்டு கேட்டு!
வண்டமிழிற் பாடிடுவேன் பாட்டு பாட்டு!
அஞ்சுகத்தாள் பக்கம்வரக் கெஞ்சுகின்ற போதினிலே
அண்டிடுவாள் நெஞ்சக்குரல் கேட்டு கேட்டு!
உன்னினைவில் நானிருக்க என்னினைவில் நீயிருக்க
ஒற்றைநொடி போதுமடா என்றாள் என்றாள்!
மின்னியெழும் அன்பினிலே மேதினியும் வாழ்ந்திருக்கும்
விந்தைமொழி சொல்லியெனை வென்றாள் வென்றாள்!
(இலாவணி)
ஞா.நிறோஷ் அரவிந்த்
2016.05.05
Comments
Post a Comment