காற்றில் கதிராட!

காற்றில் கதிராடக் காணும் மனமாட
ஊற்றாய்ச் சுரக்கும் உவப்பு!

காற்றில் கதிராடக் காணும் மனமாட
ஊற்றாய்ச் சுரக்கும் உவப்பினில் - தோற்றும்
கவிதைத் தமிழாடக் காண்!

காற்றில் கதிராடக் காணும் மனமாட
ஊற்றாய்ச் சுரக்கும் உவப்பினில் - தோற்றும்
கவிதைத் தமிழாடக் காணும் அழகே!
சுவைக்கும் ஒருபதில் சொல்!

(குறள்வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா)

ஞா.நிறோஷ் அரவிந்த்
2016.05.08

Comments