சிந்துப்பா!

அச்சங்கள் மிச்சங்கள் இல்லை – வாழ்வை
அன்பினால் வென்றிட ஏதிங்கே எல்லை
உச்சங்கள் தொட்டிட வேகம் – கொண்டே
ஓடிட வெற்றிகள் நம்மையே சேரும்!

வஞ்சனை கோபங்கள் ஏனோ – இந்த
வாழ்க்கையும் வையத்தில் நித்தியம் தானோ!
நஞ்சுறு வார்த்தைகள் வேண்டா – நீவிர்
நாக்கினில் தேன்பூசிப் பேசவும் வேண்டா!

உண்மையாய் பேசுதல் போதும் – இதை
உள்ளத்தில் கொள்ளுதல் நன்மையும் ஆகும்.
அண்டிய துன்பங்கள் போக – நானும்
அன்புடன் பாடுவேன் சிந்துப்பா வாக!

(ஆனந்தக்களிப்பு)

ஞா.நிறோஷ் அரவிந்த்
2016.03.22

Comments