எது வாழ்க்கை!
இதுவோ வாழ்கை, என்றொருவர்
~ இதுவே வாழ்க்கை, மற்றொருவர்
எதுதான் வாழ்க்கை என்றுலகில்
~ ஏங்கித் தவிப்பார் இன்னொருவர்
புதுமை படைக்க விரும்புகையில்
~ புயலும் சூழ்ந்து தரும்வலியில்
கதைகள் பேசி வாழ்க்கையிங்கே
~ கடந்து போகும் உண்மையிதே!
(அறுசீர் ஆசிரிய விருத்தம்)
ஞா.நிறோஷ் அரவிந்த்
2016.03.03
Comments
Post a Comment