என் தோழன்!

சோகம் மறைத்தென் உடனிருந்து
~ சுமையும் தாங்கும் என்தோழன்
போகும் தூரம் துணையெனவிப்
~ புவியில் உற்றான் என்தோழன்
வேகும் நெஞ்சத் துயரமெல்லாம்
~ விலக்கி வைக்கும் என்தோழன்
பாகின் சுவையாய் நட்பினிக்கப்
~ பரமன் தந்தான் தோழனையே!

ஞா.நிறோஷ் அரவிந்த்
2016.02.29

Comments