தமிழில் எழுத்துப் பிழைகள் தவிர்க்கலாமே!

நமது தாய் மொழியில் எழுதும் பொழுதாவது எழுத்துப் பிழைகள் கண்டிப்பாகத் தவிர்க்க முயல வேண்டும்.
மிக இனிதான தமிழ் மொழி பிழைகளுடன் எழுதப்படும் பொழுதும் உச்சரிக்கப்படும் பொழுதும் நாராசமாக ஒலிக்கும் சூழ்நிலைகள் மிக அதிகம்.
தமிழைத் தாயாக மதித்து வணங்கும் நமக்குப் பிழைகள் தவிர்க்கும் கடமை மிக அதிகம்.



விஜய் தொலைக்காட்சியின் ஒரு வார்த்தை ஒரு இலட்சம் நிகழ்ச்சி வரவேற்கத்தக்கது என்பது என் எண்ணம். அந்த நிகழ்ச்சியின் உள்நோக்கம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்... ஆனால் பயன் அதிகமல்லவா... அதைப் பார்க்கும் போது தான் புரிகின்றது நாம் வார்த்தைகளை உச்சரிக்கவும் புரிந்து கொள்ளவும் சிரமப்படுவது.
தட்டச்சிடும் பொழுது சில பிழைகள் நேர்ந்து விடுவதுண்டு. அவற்றைச் சரவை பார்த்துச் சரி செய்ய முயல்வது நம் எழுத்தின் மதிப்பைக் கூட்டிவிடும்.

சில அடிப்படைத் தமிழிலக்கண நூல்கள் இது தொடர்பான பயிற்சிகளை வழங்கினாலும் அவற்றைப் படித்துப் பயன்பெறுவோர் மிகச் சொற்பம். ஆங்கிலம் தெரிந்திருந்தால் போதுமெனச் சிலர் நினைப்பதுவும் இதற்கோர் காரணமாக அமைகின்றது.
சமீபத்தில் திரையிடப்பட்ட ஒரு திரைப்படத்தில் கூட ஒரு வசனம் இடம்பெற்றிருந்தது. “தமிழ்நாட்டில் பிறந்துவிட்டு ஆங்கிலம் தெரியாமலிருப்பது அவமானமல்ல, தமிழ் தெரியாதிருப்பதே அவமானம்“

இதைச் சற்று மாற்றிச் சிந்திப்போம்.
“தமிழனாகப் பிறந்துவிட்டு ஆங்கிலம் தெரியாமலிருப்பது அவமானமல்ல, தமிழ் தெரியாதிருப்பதே அவமானம்“

~ ஞா.நிறோஷ்.

★ படங்கள் கூகிள் தேடுபொறியிலிருந்து தரவிறக்கப்பட்டவை. காப்புரிமை தொடர்பாக அறிவிக்கப்படுமிடத்து அவை நீக்கப்படும்.

Comments

  1. இதை எப்போதும் நான் சொல்லும் போது பலர் கோபப்படுவதண்டு.
    நாராசமாக இருக்கும்.

    ReplyDelete

Post a Comment