விபத்துக்களும் விளைவுகளும்.
எதை எழுதுவது, எப்படி எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருந்த போது நான் அனுபவித்த ஒன்றைப் பற்றி எழுதலாம் என்று தோன்றியது.
விபத்துக்கள், அவை நடைபெறும் கணத்தில் வாழ்க்கைத் தத்துவத்தைப் புரியவைக்கின்றன என்று சொல்லலாம். “எதுவும் நிரந்தரமல்ல, ஒரே கணத்தில் அனைத்தும் மாறலாம்” என்று சொல்வதைப் போல் இருக்கின்றது. ஆனால் அவை ஏற்படுத்தும் வலிகளும் வைத்தியசாலை வாசமும் நாம் உணர்ந்த வாழ்க்கைத் தத்துவத்தைத் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ மறக்கடிக்கச் செய்கின்றன.
எதிர்பாராமலேயே நடைபெறுகின்ற விபத்துக்கள் நாம் எதிர்பாராத பலவிதத் தாக்கங்களை நம்மில் ஏற்படுத்திச் செல்கின்றன. சற்று நேரத்தில் நடந்து முடிகின்ற அவை ஏற்படுத்துகின்ற விளைவுகள் சற்று நேரத்திற்கோ சற்று நாட்களுக்கோ அல்லது சில வருடங்களுக்கோ என பல வரையறைகளில் தம் விளைவுகளைக் காண்பிக்கின்றன.
ஞா.நிறோஷ்.
(Images : Downloaded from Google. Some of these images may be copyrighted. If so they will be removed from this blog.
படங்கள் : Googleஇல் இருந்து தரவிறக்கப்பட்டவை. இவற்றில் சில காப்புரிமை பெற்றிருக்கலாம். அவ்வாறான சந்தர்ப்பத்தில் அவை இவ் வலைப்பூவிலிருந்து நீக்கப்படும்.)
சில நேரங்களில் நாம் விபத்துக்களைச் சந்திக்கின்றோமா இல்லை விபத்துக்கள் நம்மைச் சந்திக்கின்றனவா என்று புரிவதில்லை.
விபத்துக்கள், அவை நடைபெறும் கணத்தில் வாழ்க்கைத் தத்துவத்தைப் புரியவைக்கின்றன என்று சொல்லலாம். “எதுவும் நிரந்தரமல்ல, ஒரே கணத்தில் அனைத்தும் மாறலாம்” என்று சொல்வதைப் போல் இருக்கின்றது. ஆனால் அவை ஏற்படுத்தும் வலிகளும் வைத்தியசாலை வாசமும் நாம் உணர்ந்த வாழ்க்கைத் தத்துவத்தைத் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ மறக்கடிக்கச் செய்கின்றன.
எதிர்பாராமலேயே நடைபெறுகின்ற விபத்துக்கள் நாம் எதிர்பாராத பலவிதத் தாக்கங்களை நம்மில் ஏற்படுத்திச் செல்கின்றன. சற்று நேரத்தில் நடந்து முடிகின்ற அவை ஏற்படுத்துகின்ற விளைவுகள் சற்று நேரத்திற்கோ சற்று நாட்களுக்கோ அல்லது சில வருடங்களுக்கோ என பல வரையறைகளில் தம் விளைவுகளைக் காண்பிக்கின்றன.
வீதிகளில் மட்டுமே நடைபெறுகின்ற விபத்துக்களை மட்டுமே விபத்துக்கள் என்ற
வகையினுள் அடக்கி விட முடியாது. இருந்த போதிலும் அவை அதிகளவு நடைபெறுவதாலும் பாரிய
தாக்கங்களை ஏற்படுத்துவதாலும் அவை பற்றி அதிகம் கருதவேண்டியுள்ளது.
சாலை விதிகளைச் சரியாகக் கடைப்பிடிக்கின்ற ஒருவர் விபத்துக்கு உட்படமாட்டார்
என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க கருத்தாக அமையாது. சாலை விதிகளையே அறியாத அல்லது
கடைப்பிடிக்காத ஒரு நபரினால் அவர் விபத்திற்கு உட்பட முடியும். இவ்வாறு ஒரு
சூழ்நிலைக்குள் நாம் உட்படும் பொழுது யாரைக் குறை கூற முடியும், யார் மீது பழி
சுமத்த முடியும். விதிகளினைச் சரியாகக் கடைப்பிடித்தவரையா அல்லது
கடைப்பிடிக்காதவரையா அல்லது எதற்காக இவ்விதிகள் என்று அலட்சியப்படுத்துகின்ற நம்
மனப்போக்குகளையா?
இன்று நாம் வீதிச்சமிக்ஞைகளைக் கவனிக்கின்றோமோ இல்லையோ போக்குவரத்துப்
பொலிசார் நிற்கின்றனரா என்பதை மட்டுமே கவனிக்கின்றோம். அந்தக் காக்கியுடை தரிசனம்
கிடைக்காவிடில் கணநேரத்தில் நம் மனதில் ஒழிந்திருந்த பிசாசு
வெளிப்பட்டுவிடுகின்றது. நாம் விதிகளை மீறத் துணிகின்றோம். அந்தப் பிசாசு நம்மை
மட்டுமல்லாது மற்றையவர்களையும் அழித்து விடுகின்றது. இந்த மனநிலையில் மாற்றங்களைக்
கொண்டு வந்து நம்மையும் பிறரையும் காப்போம்.
ஞா.நிறோஷ்.
(Images : Downloaded from Google. Some of these images may be copyrighted. If so they will be removed from this blog.
படங்கள் : Googleஇல் இருந்து தரவிறக்கப்பட்டவை. இவற்றில் சில காப்புரிமை பெற்றிருக்கலாம். அவ்வாறான சந்தர்ப்பத்தில் அவை இவ் வலைப்பூவிலிருந்து நீக்கப்படும்.)
வரும் முன் காப்போம்...!
ReplyDeleteநிச்சயமாக !
Deleteநன்றி...